ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் கைது
திருவள்ளூர் மாவட்டம் நேமம் சுனில்குமார் என்பவரிடம் அவரது நிலத்தை சர்வே செய்வதற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் விஜயகுமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
அதே போன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரக்கடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வி என்பவர், தன்னிடம் பட்டா மாறுதல் வேண்டி அணுகிய கணேசன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments