4-வது முறையாக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு.. பிரதமர் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு..!
ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புதனன்று பதவியேற்க உள்ளார்.
கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐ.டி. பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.
பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பா.ஜ.க., ஜனசேனா கட்சியினரும் மெகா அமைச்சரவையாக பதவியேற்கும் என்று கருதப்படுகிறது. முதலமைச்சராக பதவியேற்ற பின் புதன் இரவு தனது குடும்பத்தாருடன் திருப்பதி சென்று தங்கும் சந்திரபாபு நாயுடு, மறுநாள் 13-ம் தேதி காலை ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டுள்ளார்.
Comments