ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற ஜீப்.. டீக் கடையில் நின்றிருந்த 3 பேர் பலி..!

0 412

மதுரை வாழைத்தோப்பை சேர்ந்த கண்ணன் என்பவர் சாயல்குடியிலிருந்து மதுரைக்கு திரும்பும் போது அவர் ஓட்டிய ஜீப் சாலையில் தாறுமாறாக ஓடி மோதியதில், மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே டீக் கடையில் நின்றிருந்த காளிமுத்து, விஜயராமன், பெருமாள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

ஜீப்பை விட்டுவிட்டு கண்ணன் தப்பி ஓடினார். விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கண்ணனை ம.ரெட்டிப்பட்டியில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments