கஞ்சா விநியோகம் குறித்து போலீசுக்குத் தகவல் தெரிவித்த பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 2 பேர் கைது

0 427

சென்னை டி.பி.சத்திரத்தில் கஞ்சா விநியோகம் குறித்து போலீசுக்குத் தகவல் தெரிவித்த பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜண்டா என்கிற சந்தோஷும் அவனது கூட்டாளிகள் 2 பேரும் கஞ்சா விற்றது பற்றி அமுதா என்ற பெண் போலீசுக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பிணையில் வெளிவந்து, அமுதா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும் கூறப்படுகிறது.

மூவரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments