பில்டு குவாலிட்டிக்கு பெயர் பெற்ற டொயோட்டா பார்ச்சுனருடன் மோதியதால் சிதறிய மாருதி ஆம்னி கார் - சிறுவர்கள் பலி.. சைல்டு டிரைவிங் விபரீதம்.. பெற்றோரே உஷார்..!

0 1088

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இரு சிறுவர்கள் அதிவேகத்தில் ஓட்டிச்சென்ற மாருதி ஆம்னி கார் , டயோட்டா பார்ச்சுனர் கார் மீது மோதி உடைந்து உருக்குலைந்த விபத்தில் இரு சிறுவர்களும் உடல் சிதறி பலியாயினர்...

பில்டு குவாலிட்டிக்கு பெயர் பெற்ற டயோட்டா பார்ச்சுனர் காரே இப்படி ரெயிலுக்கு இடையில் சிக்கியது போல உருக்குலைந்து கிடக்கும் போது, இந்த கார் மீது மோதிய மாருதி ஆம்னி காரின் நிலை என்னாவாயிருக்கும்..?

காயலன் கடை பழைய இரும்பு போல சிதறி கிடக்கும் இந்த உதிரி பாகங்கள் தான் , பார்ச்சுனர் கார் மீது மோதிய மாருதி ஆம்னி கார் என்கின்றனர் போலீசார்..!

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ், 17 வயதான இவர் , அதே ஊரை சேர்ந்த சுதர்சனம் என்ற 14 வயது சிறுவனுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுப்பதாக கூறி பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் வீட்டில் இருந்து மாருதி ஆம்னி காரை எடுத்துச் சென்றுள்ளார். திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு கபிலர்மலையில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் சுதர்சனத்துக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது பரமத்தியில் இருந்து ஈரோடு நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த டொயோட்டோ பார்ச்சுனர் கார் மீது ஆம்னி வேன், பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது, இதில் மோதிய வேகத்தில் ஆம்னி வேன் சுக்குநூறாக நொறுங்கி சின்னாபின்னமாக சிதறியது. இதில் ஆம்னி காருக்குள் இருந்த சிறுவர்களான சுதர்சனம், லோகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . விபத்தில் உருக்குலைந்த பார்ச்சுனர் காரை ஓட்டி வந்த விக்னேஷுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதிர்பராத விதமாக பார்ச்சுனர் காரை கண்டதும் , மிரண்டுபோன சிறுவன் சுதர்சனம் பிரேக்கிற்கு பதில் ஆகிசிலேட்டரை அழுத்தியதால் அதிவேகத்தில் பார்ச்சுனர் கார் மீது ஆம்னி கார் மோதியதால் இரு வாகனங்களுமே உருக்குலைந்து போனதாக போலீசார் தெரிவித்தனர். பெற்றோர்களின் எச்சரிக்கையை மீறி சிறுவயது பிள்ளைகள் திருட்டுத்தனமாக கார் ஓட்ட கற்றுக் கொண்டால் அது என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த கோர விபத்து மற்றும் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments