நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தருமபுரம் ஆதினத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் வாரணாசியில் கைது
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை தனிப்படை போலீசார் வாரணாசியில் கைது செய்தனர்.
வழக்கில் இரண்டாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள செந்தில் நான்கு மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில், அவர் வாரணசியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படையினர் இன்று கைது செய்தனர்.
Comments