நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில், மறுமணம் செய்த மனைவி உள்பட மூன்று பேரை கத்தியால் குத்தியதாக முன்னாள் கணவர் கைது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில், மறுமணம் செய்த மனைவி உள்பட மூன்று பேரை கத்தியால் குத்தியதாக முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திவாகர் தேவாரம் - தாரணி ஆகிய இருவரும் கடந்த 7 மாதங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் மகளைக் காணவில்லை என்று தாரணியின் தந்தை புகார் அளித்ததால் திவாகர் விசாரணைக்கு காவல்நிலையம் அழைக்கப்பட்டார். அப்போது அஜித் என்பவரை மணமுடித்த கோலத்தில் தாரணி காவல்நிலையத்தில் ஆஜரானார்.
இதனால் ஆத்திரம் அடைந்த திவாகர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித், தாரணி அவர்களின் உறவினர் வைரமுத்து, ஆகியோரை கத்தியால் குத்தியதால், படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Comments