தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
ஜம்மு காஷ்மீர் ஆன்மீக சுற்றுலாவிற்க்கு வந்தவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டிற்க்கு பிரதமர் மோடி , தலைவர்கள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் ரியசி பகுதியில் பேருந்துமீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கட்ராவில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்பகுதியில் ராணுவத்தினர் சுற்றி வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments