இண்டியா கூட்டணி பக்குவப்பட வேண்டும் : திருமா
சென்னை அசோக் நகரில் உள்ள தமது கட்சி அலுவலகத்துக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனுக்கு சால்வை அணிவிக்க தொண்டர்கள் முண்டியத்தனர்.
அவர்களிடையே பேசிய திருமாவளவன், விட்டால் தோள் மீதும் மடி மீதும் ஏறிவிடுவீர்களா எனக் கடிந்து கொண்டார்.
ஒரே கூட்டணியில் இருந்த போதிலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல், கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிட்டதை சுட்டிக்காட்டிய அவர், இண்டியா கூட்டணி பக்குவப்பட வேண்டும் என்பதற்காகவே ஆட்சி அமைக்க முடியாத தீர்ப்பை மக்கள் வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.
Comments