ஆக்கிரமிப்பு செய்ததாக நடிகர் சரத்குமாருக்கு எதிராக தனுஷின் தாய் வழக்கு.. நீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பை அளவிட்ட மாநகராட்சி அதிகாரிகள்

0 511

சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் மாடிப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் சரத்குமாருக்கு எதிராக நடிகர் தனுஷின் தாய் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு படி சம்மந்தப்பட்ட இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

மாடி, கார் பார்க்கிங், சரத்குமார் வசிக்கும் தரைத்தளத்தை அளவீடு செய்த நிலையில், ஆக்கிரமிப்பு பகுதிகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட மொட்டை மாடியை வேறு ஒரு நபருடன் சேர்ந்து வணிகரீதியாக பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை சரத்குமார் தரப்பு மறுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments