வலிப்பு வந்தது போல நடித்து உதவிக்கு வந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கீழே விழுந்து உயிரிழப்பு
நாமக்கல்லில் வலிப்பு வந்தது போல நடித்து உதவிக்கு வந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு தப்ப முயன்ற 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
லாரி பட்டறை தொழிலாளியான நவீன், சென்னையைச் சேர்ந்த தனது நண்பர் மாரியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபடுவதற்காக வியாழன் இரவில் மோகனூர் சாலையில் காத்திருந்தனர்.
தூரத்தில் ஒரு டூவீலர் வருவதைப் பார்த்ததும் மாரிக்கு வலிப்பு வந்தது போல நடிக்கவே அந்த டூவீலரில் வந்துக் கொண்டிருந்த வாழப்பாடியை சேர்ந்த பொன்னார் உதவிக்கு வந்துள்ளார். அப்போது அவரை மிரட்டி செல்ஃபோன், 5 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தங்களது டூவீலரில் தப்பிச் சென்றுள்ளனர்.
சிறிது தூரத்திலேயே தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் தலையில் காயம் அடைந்து உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Comments