என் சொத்தை.. நீ எப்படி பதிவாய் ? ஆபீசுக்குள் கட்டி புரண்டு சண்டை போர்க்களமான பத்திரப்பதிவு அலுவலகம்..!

0 786

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான வேலுச்சாமிக்கும் கொல்லப்பட்டியில் உள்ள 23 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக ராஜேஷ் தரப்பினர் குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்ததால் , இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உண்டானது

சர்ச்சைக்குரிய அந்த நிலத்தை பத்திர பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பத்திர பதிவு அலுவலகத்திற்குள் கடுமையாக சண்டையிட்டதால் பெண் ஊழியர்கள் பதறி ஓடினர்

இதனைக் கண்ட அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட இருவரையும் விலக்கி விட்டனர்

சார்பதிவாளர் இருதரப்பையும் வெளியேற்றினார், அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்

தகவல் அறிந்து விரைந்து வந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உள்ளேயே இரு தரப்பும் மோதி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments