நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கடலூர் மாவட்டம் வடலூரில் சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது மற்றொரு R15 பைக் மோதி ஒருவர் பலி
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தலைக்கவசம் அணியாமலும், கவனக்குறைவாகவும் சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது அதிவேகமாக வந்த யாமஹா R15 பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கொளக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜவர்மன் மற்றும் தமிழ்ச்செல்வன் சேத்தியாத்தோப்பு செல்லும் சாலையில் உள்ள டூவீலர் ஷோரூமில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு சாலையை கடந்தபோது, தோமினிக் வின்சென்ட் ராஜ் என்பவர் வந்த R15 பைக் மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேருமே தலைக்கவசம் அணியாமல் வந்த நிலையில் ராஜவர்மன் உயிரிழந்தார்.
Comments