காரில் கடத்தப்பட்ட 900 லிட்டர் புதுச்சேரி சாராயம் பறிமுதல்
காரைக்காலில் இருந்து மூட்டை மூட்டையாக காரில் கடத்தி வரப்பட்ட 900 லிட்டர் சாராயத்தை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் கைப்பற்றினர்.
கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலில் செம்பனார்கோவிலில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, நிற்காமல் சென்ற காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கார் ஓட்டுநர் தப்பிய நிலையில், யாருக்காக சாராயம் கடத்தப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.
Comments