மனைவி ராதிகாவின் வெற்றிக்காக “நாட்டாமை அங்கபிரதட்சனம்” முன்பே செஞ்சிருக்கலாமே ஆபீசர்..! எல்லா முடிவுமே தாமதம் தானா ?

0 1201

விருதுநகர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக களம் கண்ட தனது மனைவி ராதிகாவின் வெற்றிக்காக பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அங்க பிரதட்சனம் செய்து வேண்டிக்கொண்டார்

பாரதீய ஜனதாவில் தனது கட்சியை இணைத்த கையோடு, மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தவர் சரத்குமார்..!

விருது நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சரத்குமாரும், ராதிகாவும் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். வாக்கு பதிவு முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் நிலையில் மனைவியின் வெற்றிக்காகவும், மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வேண்டியும் , விருது நகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அங்க பிரதட்சனம் செய்தார்

கோவிலை சுற்றி தரையில் உருண்ட சரத்குமாருக்கு அருகில் நின்றபடி மனைவி ராதிகா அவரை உருட்டி விட்டபடியே பின் தொடர, பெண்கள் வியப்புடன் பார்த்தனர்

அங்க பிரதட்சனத்தை முடித்த சரத்குமாருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

இந்த வீடியோவை சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் , இதை ஒரு மாசத்துக்கு முன்பு செய்திருந்தால் பெண்கள் வாக்குகள் கூடுதலாக கிடைத்திருக்குமே ... எல்லா முடிவையுமே நாட்டாமை தாமதமாகத்தான் எடுப்பார் போல என்று ஒரு தரப்பும், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் அவரது வேண்டுதல் நிறைவேறிடும் என்று மற்றொரு தரப்பும் கமெண்ட் அடித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments