மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த குற்றச்சாட்டு மீது விளக்கம் அளிக்க அவகாசம் கேட்ட... ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிப்பு

0 573

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த குற்றச்சாட்டு மீது விளக்கம் அளிக்க அவகாசம் கேட்ட காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக 150 மாவட்ட ஆட்சியர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பு கொண்டதாக சமூகவலைத் தளத்தில் பதிவிட்ட ஜெய்ராம் ரமேஷ் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

திங்கள் இரவு 7 மணிக்குள் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என பதிலளித்த அவர், ஆட்சியர்களுக்கு அழுத்தம் தரப்பட்டதை நிரூபித்தால் தண்டிக்கத் தயார் என்றும் இதுபோன்ற வதந்தி பரப்பி, எல்லோர் மீதும் சந்தேகம் கொள்வது சரியல்ல என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments