டெல்லியில் பியூஸ் கோயல் தலைமையில் GST கவுன்சில் கூட்டம்...

0 1210

28ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

image

நிதித்  துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வரும் இக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது, சானிட்டரி பேடுகள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 30 வகையான பொருட்களுக்கு வரியைக் குறைப்பது, வரி கணக்கு தாக்கல் செய்வதை எளிமையாக்குவது உள்ளிட்டவை தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments