சங்கம் முக்கியமா.. சாப்பாடு முக்கியமா ? எங்களுக்கும் பசிக்குமில்ல...! உண்ணாவிரத போராட்ட பரிதாபம்..!

0 1033

மத்திய அரசின் ஹிட் அண்டு ரன் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் உண்ணாவிருதம் இருந்த நிலையில், 3 மணி நேரத்தில் ஆளுக்கு ஒரு பிரியாணி பொட்டலத்துடன் பெரும்பாலானோர் ஒதுங்கியதால் உண்ணாவிரத பந்தல் காலியானது

சங்கம் முக்கியமா... சாப்பாடு முக்கியமா... என்று பசித்த வயிறு கேட்டதால்... உண்ணாவிரத பந்தலில் இருந்து அப்பிட்டாகி ... பிரியாணியை ருசி பார்க்க வெளியே ரிப்பீட்டான லாரி சங்க உறுப்பினர்கள் இவர்கள் தான்..!

மத்திய அரசின் ஹிட் அண்டு ரன் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் .... திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்... உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்

போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பங்கேற்ற நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் பசித்ததால் உண்ணாவிரதமிருந்தவர்கள் எழுந்து சாப்பிட சென்று விட்டனர். ஒருவர் பின் ஒருவராக கிளம்பிச்சென்றதால் உண்ணாவிரத பந்தல் கிரிகாலன் மேஜிக் ஷோ அரங்கம் போல காலிச்சேர்களாய் காட்சி அளித்தது.

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சிலர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையின் ஓரங்களில் குழுவாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டனர் 

சங்க உறுப்பினர்கள் பசி தாங்காதவர்கள் என்று தெரிந்தும் உண்ணாவிரத்தத்துக்கு ஏற்பாடு செய்தது ஏன் ? என்று சிலரும், சங்கம் முக்கியமா ? சாப்பாடு முக்கியமா ? என்று கேட்டால் நானெல்லாம் சாப்பாடு தான் முக்கியம் என்பேன் என்றும் கமெண்ட் அடித்தபடி சாவகாசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments