சின்ன சின்ன வீடு கட்டி.. வீட்டுக்குள்ளே பொங்கலிட்டு அசத்திய பெண் குழந்தைகள்..! இது தான் சிறு வீட்டு பொங்கல்

0 751

தென்மாவட்டங்களில் சிறு பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் கொண்டாடப்படும் சிறுவீட்டுப்பொங்கல் விழா சிறப்பாக நடந்தது

தைப்பூசத்தையொட்டி நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் கொண்டாடும் சிறுவீட்டு பொங்கல் விழா களை கட்டியது

சிறிய அளவிலான வீடு மற்றும் வீடு சார்ந்த பொருட்களை களி மண்ணில் உருவாக்கி, அதனை அருகில் வைத்து படைத்து தாயார் வழிகாட்டுதலுடன் பெண் பிள்ளைகள் நிஜமாக பொங்கலிட்டு பூஜை செய்து வணங்கி மகிழ்வது இந்த விழாவின் சிறப்பம்சம்

ஆண்டாள் தாயார் மார்கழி மாதம் பௌர்ணமியில் நோன்பு தொடங்கி தை மாதம் பொங்கல் முடித்து வரும் பௌர்ணமியான தைப்பூசத் தினத்தன்று நோன்பு முடிப்பது வழக்கம் என்ற நம்பிக்கையின்படி நாள்தோறும் வீட்டு வாசலில் சாணி பிள்ளையார் மீது வைக்கப்பட்ட செம்பருத்தி பூக்களை சேகரித்து வைத்து சிறு வீட்டு பொங்கல் கொண்டாடி பிரசாத்துடன் அவற்றை நதியில் கொண்டு சேர்க்கின்றனர்

தைபூசத்தையொட்டி வரக்கூடிய பவுர்ணமி அன்றோ அல்லது பொங்கல் பண்டிகை முடிந்து வருகின்ற ஞாயிற்றுகிழமைகளிலோ தென்மாவட்ட மக்கள் சிறுவீட்டு பொங்கல் விழாவை கொண்டாடுவதாக வட்டார எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments