சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளுக்கு 107 கிலோ கேக் வெட்டிய இ.பி.எஸ்...
எம்.ஜி.ஆரின் 107-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
107 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டிய அவர், அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சமூகம் சீரழிந்தால் பரவாயில்லை என்ற வகையில் நடிகர்கள் நடிக்கும் நிலையில், மக்களுக்கு சிறந்த கருத்துக்களை கூறிய எம்.ஜி.ஆர். தான் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்றார்.
Comments