எஜமானியை தாக்கிய போதை ஆசாமியை தாக்க இயலாமல் தவித்த வளர்ப்பு நாய்கள்

0 1343

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே எஜமானியை தாக்கிய போதை ஆசாமியை தாக்க இயலாமல் பரிதவித்த 2 வளர்ப்பு நாய்கள் சுற்றுச் சுவருக்குள் ஓடித் தவித்தன.

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று திருப்பி செலுத்த தவறிய கிராத்தூர் பகுதியை சேர்ந்த ரீனா என்பவரின் வீட்டிற்கு நிதி நிறுவன ஊழியர்கள் சென்ற நிலையில், சுற்றுசுவருக்கு வெளியே நின்று ரீனா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த போதை ஆசாமி சசி, ரீனாவை தாக்கி ஆபாசமாக பேசி எட்டி உதைத்தார்.

இதனை கண்ட ரீனாவின் 2 வளர்ப்பு நாய்கள் ஓடிச்சென்று , சுற்றுச்சுவர் மீது ஏறி நின்று போதை ஆசாமியை நோக்கி பலமாக குறைத்தது விரட்டின. தாக்குதலில் காயம் அடைந்த ரீனா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments