சென்னையில் மெட்ரோ பணிகளுக்காக ராயப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்... அஜந்தா மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை

0 708

சென்னையில், மெட்ரோ ரயில் பணிக்காக, இராயப்பேட்டை - மயிலாப்பூரை இணைக்கும் அஜந்தா மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் வள்ளுவர் சிலை பகுதியிலிருந்து இராயப்பேட்டை மருத்துவமனை சாலைக்கு செல்வோர், அஜந்தா பாலத்தின் சர்வீஸ் சாலையில் வந்து, நீல்கிரிஸ் சூப்பர் மார்கெட் அருகே இடதுபுறம் திரும்பி, நேராக சென்று, மியூசிக் அகாடமி அருகே வலது புறம் திரும்பி ஆர்.கே.மடம் சாலை வழியாக, இராயப்பேட்டை செல்லலாம்.

இராயேப்பேட்டையிலிருந்து மயிலாப்பூர் செல்வோர், அஜந்தா சந்திப்பில், இடதுபுறம் திரும்பி, வி.பி.ராமன் சாலை வழியாக சென்று, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக ஆர்.கே.சாலை யெல்லோ பேஜஸை அடைந்து மயிலாப்பூர் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments