சொத்து தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை... மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

0 973

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொத்து தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கனவாய்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மற்றும் இவரது சகோதரர் ராஜா ஆகியோர் இடையே சொத்துப் பிரச்னை தொடர்பாக  நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிறன்று இரவு மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுபோது பழனியாண்டின் 2 மகன்கள் உள்பட 3பேரை சகோதரர் ராஜாவின் மகன்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பழனியாண்டியின் மகன் முருகேசன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் மற்றொரு மகன் உள்பட 2பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments