புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 1124

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயும் சேதமடைந்த குடிசைகளுக்கு 8 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது.

33 சதவீதம் மற்றும் அதற்கு மேலாக மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17 ஆயிரம் ரூபாயும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8,500 ரூபாயும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments