விரைவில் ஏர் இந்தியாவில் இணைய உள்ள ஏர்பஸ் 350 விமானங்கள்

0 2135

அடுத்த மாதம் ஏர்பஸ் ஏ350 வகையை சேர்ந்த முதல் விமானம் ஏர் இந்தியா நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது.

3 வளைகுடா நாட்டு விமான நிறுவனங்களுக்குப் போட்டியிட உள்ள முதல் இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியா ஆகும். இடைநிற்றல் இல்லாத நெடுந்தொலைவு சர்வதேச பயணங்களுக்கு இந்த விமான சேவைகள் பயன்படும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நான்கு ஏர்பஸ் ஏ350 விமானங்கள் ஏர் இந்தியாவின் விமான சேவையுடன் இணைக்கப்பட உள்ளன.மொத்தம் 470 விமானங்களுக்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வகை விமானங்களை இயக்குவதற்காக வெளிநாடுகளில் விமானிகளுக்கும் பணிக்குழுவினருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே 12 விமானிகள் சிங்கப்பூரில் தங்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments