அமெரிக்காவில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

0 954

அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் பிரிவில் முனைவர் பட்டம் படித்து வந்தார்.

நவம்பர் 9 ஆம் தேதி வெஸ்டர்ன் ஹில்ஸ் அருகே துப்பாக்கியில் சுடப்பட்ட நிலையில் காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமையில் சேர்த்த நிலையில் நவம்பர் 11ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆதித்யாவின் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது வரை யாரும் கைது செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments