இந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 79 கிலோமீட்டர் தூரம் வரையிலான 29 சுரங்கங்களிலும் பாதுகாப்புக்கான அம்சங்கள் ஆய்வு

0 1186

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 79 கிலோமீட்டர் தூரம் வரையிலான 29 சுரங்கங்களிலும் பாதுகாப்புக்கான அம்சங்கள் ஆராயப்படுகின்றன.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அண்மையில் உத்தரகாசியில் உள்ள சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியதைத் தொடர்ந்து சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி மெட்ரோ ரயில் நிபுணர்கள் உள்பட ஆய்வுக்குழுவினர் ஏழு நாட்களில் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments