நாகப்பட்டினத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

0 831

வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து மோசடி செய்த வழக்கில் சிறை சென்று வெளியில் வந்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பால்பண்ணைச்சேரியை சேர்ந்த ராஜேஸ்வரி,  திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நாராயணசாமி, அவரது மருமகன் தனபால் ஆகியோர் அரசு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக 15 பேரிடம் மொத்தமாக 50 லட்சத்திற்கும் மேல் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. 

வேலையும் வாங்கித்தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments