ஒற்றைக் காலுடன் ஆடு மேய்த்து பிழைத்து வரும் மாற்றுத்திறனாளி.. சிதிலமடைந்த வீட்டை புதுப்பித்துத் தருமாறு அரசுக்குக் கோரிக்கை

ஒற்றைக் காலுடன் ஆடு மேய்த்து பிழைத்து வரும் மாற்றுத்திறனாளி.. சிதிலமடைந்த வீட்டை புதுப்பித்துத் தருமாறு அரசுக்குக் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் சிதிலமடைந்த தனது வீட்டை புதுப்பித்துத் தருமாறும் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
9 வயதில் சாலை விபத்தில் ஒரு காலை இழந்த நாகராஜன், ஆடு மேய்த்துக்கொண்டு மாற்றுத்திறனாளிக்காக தமிழக அரசு வழங்கிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட அந்த வீடு சிதிலமடைந்துவிட்டதாகக் கூறும் அவர், அதனை புதுப்பித்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments