தங்க முலாம் பூசிய தோரணத்தை கொடுத்து அரிசிக்கடைக்காரரிடம் பணம் பறிக்க முயன்ற வடமாநிலத்தவர் 2 பேர் கைது

0 1342

தென்காசி மாவட்டம் சிவகிரியில், புதையல் தங்கம் ஆசைகாட்டி, அரிசிக்கடைக்காரரிடம் ஐந்து லட்சம் ரூபாயை அபகரிக்க முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரிசிக்கடை நடத்திவரும் தங்கராஜை அணுகிய, சுனில், கிஷன் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த இரண்டு கிலோ எடையுள்ள புதையல் தங்க தோரணங்களை மிக குறைந்து விலைக்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஐந்து லட்சம் ரூபாய் விற்க பேரம் பேசப்பட்ட நிலையில், முன்பணமாக 2500 ரூபாய் கொடுத்த தங்கராஜ்க்கு சந்தேகம் ஏற்படவே சிவகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்ததுள்ளார்.

இருவரையும் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த அவர்கள், கடையநல்லூரில் கூடாரம் அமைத்து தங்கி பலரிடமும் போலி தோரணங்கள், காசுகளைக் காட்டி கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் லட்சக்கணக்கில் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments