கதவணை சரியில்லாத காரணத்தால் 1000ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கவலை

0 790

நாகை மாவட்டம் திருமருகல் அருகே கதவணை சரி இல்லாத காரணத்தால் 8 நாட்கள் ஆகியும் வடியாத மழை நீரால் 1000 ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலப்பூதனூர் - திருமாளம் பொய்கை இடையே உள்ள வடிகால் வாய்க்கால்  பில்லாளி, அன்னவாசநல்லூர், திருமாளம் பொய்கை, மலட்டேரி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட 9 வருவாய் கிராமங்களுக்கான சுமார் ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு வடிகால் வாய்க்காலாக உள்ளது.

இந்த நிலையில் இந்த வாய்க்காலில் நீர்வளத்துறை சார்பில் தரைத்தளம் சுமார் 3 அடி உயரம் உயர்த்தி கட்டப்பட்டுள்ளதால்  கடந்த 15 ஆண்டுகளாக மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நின்று நெற்பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments