அய்யோ.. அநியாயமா 2 உயிர் போச்சே..! அறுந்து கிடந்த மின் கம்பியால் விபரீதம்..!

0 2150

பெங்களூரு நகரில் அறுந்து விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பி மீது கால் வைத்த தாய் மற்றும் 9 மாத குழந்தை உயிரோடு தீயில் எரிந்து பலியான பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

கைக்குழந்தையுடன் பிளாட்பாரத்தில் நடந்து சென்ற பெண் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை மிதித்ததால் உயிரோடு தீப்பற்றி எரிந்த காட்சிகள் தான் இவை

பெங்களூரு நகரில் இன்று காலை 6:00 மணியளவில் காடுகோடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஹோ பார்ம் என்ற பகுதியில் பெங்களூரு மின்சார வாரியத்தின் உயர் அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது.

இதனை அறியாமல் பிளாட்பாரத்தில் 9 மாத குழந்தையுடன் நடந்து சென்ற சவுந்தர்யா என்ற பெண் மீது மின்சாரம் தாக்கி உடலில் தீப்பற்றியது. இதனால் சவுந்தர்யா அலறித்துடித்தார்.

அவரது 9 மாத பெண் குழந்தை சுவிக் ஷாவும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது.

இந்த கோர விபத்து தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மின்வாரிய அதிகாரிகள் உட்பட மூன்று பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இது மழைகாலம்.. பாதசாரிகள் வீதியில் நடந்து செல்லும் போது மிகுந்த கவனத்துடன் செல்லத்தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments