திமுக தலைமையிலான ஊழல் ஆட்சியை தமிழக மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர் - அண்ணாமலை

திமுக தலைமையிலான ஊழல் ஆட்சியை தமிழக மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய அவர், 70 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை என குற்றம் சாட்டினார்.
தமிழக அமைச்சரவையில், 16 அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
பெரம்பலூர் கல்குவாரி டெண்டரின் போது ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து, கலெக்டர், எஸ்.பி.,கண் முன்னே பாஜகவினரை தாக்கிய அமைச்சரின் உதவியாளர் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர் அனைவரையும் சும்மா விட மாட்டோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
Comments