அமெரிக்கா வெள்ளை மாளிகை முன் உருவபொம்மைகளை சடலங்கள் போல் அடுக்கி அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போராட்டம்

0 745

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை கண்டிக்கும் விதமாக ”அம்னெஸ்டி இண்டர்நேஷனல்” என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபர் மாளிகை முன் வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்ட உருவபொம்மைகளை சடலங்கள் போல் அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸாவில் உடனடியாக போரை நிறுத்தும்படி இஸ்ரேல் அரசை நிர்பந்திக்குமாறு அதிபர் ஜோ பைடனுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

போரை ஒரேடியாக நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றபோதும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் வகையில் இடையிடையே நிறுத்த வழிவகை செய்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments