பாஜக ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்படும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 2139

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சீதாபூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பங்கேற்று பேசிய அவர், சத்தீஸ்கரில் அதிகமான மத மாற்றங்கள்  நடைபெறுவது கவலை அளிப்பதாகத் குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகக் கூறியுள்ள அவர், மனித கடத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். எனவே சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசை வேரோடு பிடுங்குவது அவசியம் என்றும் ராஜ்நாத் சிங் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments