அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல் திரையரங்கில் அடித்து உதைத்த பெண்கள்..!

0 4046

ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்க்கச்சென்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.-ன் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 சென்னை தி.நகர் ஜிஎன்செட்டி சாலையில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த தியேட்டருக்கு தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ் சாத்தூர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் குடும்பத்தோடு இரவுக் காட்சிக்கு படம் பார்க்க சென்றார்.

ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்து கொண்டிருந்த போது பின்பக்க இருக்கையில் அமர்ந்து இருந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் அதிக சத்தத்துடன் விசில் அடித்து சத்தம் எழுப்பி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இது தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி ரமேஷ், அவர்களை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதால் பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் ரமேஷ் மற்றும் அவரது மகனை முகத்தில் பயங்கரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் தலையிட்டு 2 தரப்பினரிடமும் சமாதானம் பேசிய போது, தாங்கள் தாக்கியது அமைச்சரின் மகன் மற்றும் பேரன் என்பதை அறிந்ததும் 6 பேர் கும்பல் தப்பி ஓடி விட்டது.

இதனை கண்ட அமைச்சரின் மகன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் தப்பிக்க விட்டது ஏன்? எனக்கேட்டு, தியேட்டர் நிர்வாகத்தினர் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

இந்த தாக்குதலில் ரத்த காயமடைந்த ரமேஷ் மற்றும் அவரது 17 மகன் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தப்பி ஓடிய கும்பலை தேனாம்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

தியேட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி தாக்குதலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments