இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.. வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்பு

0 618

இந்தியா - அமெரிக்கா இடையிலான 2 பிளஸ் 2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்றனர்.

அமெரிக்கா சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்டணி பிளிங்கனும், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினும் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தைக்கு முன்பாக நால்வரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணம் இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்ததாகவும், செப்டம்பரில் ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வருகை தந்த அமெரிக்க அதிபர் பைடனின் பயணம் இருநாடுகளின் உறவை பலப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 200 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டணி பிளிங்கன், இந்தியா, அமெரிக்கா நட்பு, இரு நாட்டு மக்களிடையேயான உறவை ஆழப்படுத்துவதாக தெரிவித்தார்.

இருநாட்டு அமைச்சர்கள் இடையிலான இன்றைய பேச்சுவார்த்தையில், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு, உலகளாவிய சவால்கள், ராணுவம், பாதுகாப்பு, ஆற்றல், விண்வெளி, உயர் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments