கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தீ வைத்த சமூக விரோதிகள்.. முக்கிய ஆவணங்கள், முதியோர் உதவிப் பொருட்கள் தீயில் கருகி சேதம்..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தீ வைத்த சமூக விரோதிகளை, போலீசார் தேடி வருகின்றனர்...
கோட்டையூர் வருவாய் கிராமத்தில் செயல்பட்டு வந்த, கிராம நிர்வாக அலுவகத்தில், பற்றிய தீயை ஊர் மக்கள் அணைத்தனர். இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் முதியோருக்கான உதவி பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு அருகில், இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவதாக கூறப்படும் நிலையில், தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
Comments