கேரளாவின் வயநாட்டில் வீட்டில் பதுங்கிய மாவோயிஸ்டுகள் இரண்டு பேரை துப்பாக்கிச் சூடு நடத்தி சிறப்பு படையினர் கைது

0 1451

கேரளாவின் வயநாட்டில் வீட்டில் பதுங்கிய மாவோயிஸ்டுகள் இரண்டு பேரை துப்பாக்கிச் சூடு நடத்தி சிறப்பு படையினர் கைது செய்தனர்.

பேரி பகுதியில் அனீஸ் என்பவரது வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்த மூன்று பெண்கள் அடங்கிய மாவோயிஸ்ட் கும்பல் ஒன்று உணவு கேட்டு சாப்பிட்டுள்ளனர்.

தகவலறிந்த தண்டர் போல்ட் சிறப்பு காவல் படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து சரணடையுமாறு தெரிவிக்கவே, அதற்கு மாவோயிஸ்ட்டுகள் மறுத்துள்ளனர்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில் சில மாவோயிஸ்டுகள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அதிரடியாக வீட்டிற்குள் புகுந்த சிறப்பு படையினர், 2 மாவோயிஸ்டுகளை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments