ஆயிரக்கணக்கான அகதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அடைக்கலம் தேடி வருகை

கடந்த நான்கைந்து நாட்களில் பாகிஸ்தானில் 4 முறை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் அகதிகள் புலம் பெயர்வதன் காரணமாக பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடுமையான பொருளாதாரச் சீர்குலைவு மற்றும் நிதி நெருக்கடிக்கு இடையே பொதுத் தேர்தல்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஆப்கானில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அடைக்கலம் தேடி வருகின்றனர். இதில் ஆவணங்கள் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி விட இடைக்கால பாகிஸ்தான் அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது
Comments