காசா மீதான தாக்குதல்களை இடைநிறுத்தம் செய்வது குறித்து முக்கிய விவாதம்... இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஆலோசனை

காசா மீதான தாக்குதல்களை இடைநிறுத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இருவரும் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு, இஸ்ரேல், காசா, மேற்குக்கரை நிலவரம் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹமாசிடம் பிணைக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரித்திருப்பதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
Comments