நவ.9 ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள்

திட்டமிட்டபடி, வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ், காலாண்டு வரி உயர்வு, ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து 20 நாட்களாகியும், அரசு பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை எனக்கூறினார்.
Comments