வட மாநிலங்களில் நிலநடுக்கம்..!

நேபாளத்தை மையமாகக் கொண்டு 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் உணரப்பட்டது.
நேபாளத்தின் மேற்கு பகுதியில் மையம் கொண்டு மாலை 4.16 மணி அளவில் நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 5 புள்ளி 6 என்ற அளவில் பதிவானது.
அந்நாட்டில் கடந்த 3ஆம் தேதியன்று நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 160 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு உடனடியாக வெளியேறினர்.
ஏற்கனவே தீவிர காற்று மாசுபாட்டால் சிரமத்திற்குள்ளாகியுள்ள டெல்லி மக்கள் நிலநடுக்கத்தால் வீதிகளில் திரண்டனர்.
Comments