"ரிங் பைப் லைன்" திட்டம்.. சென்னைக்கு அடுத்த நூறாண்டுகளுக்குத் தண்ணீர் பிரச்சனை இருக்காது.. அமைச்சர் கே.என்.நேரு

0 2339

சென்னையை அடுத்த நெம்மேலியில் 10 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 150 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இன்னும் 15 நாட்களில் முதலமைச்சர் தொடங்கிவைக்கவுள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நீலாங்கரையில் 418 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் 77 கோடி ரூபாயில் குடிநீர் வழங்கல் பணிகளுக்கான அடிக்கல்நாட்டும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

ரிங் ரோடு போல சென்னையைச் சுற்றியுள்ள குடிநீர் திட்டங்களை ஒருங்கிணைத்து "ரிங் பைப் லைன்" அமைக்கும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அடுத்த நூறாண்டுகளுக்கு சென்னை மக்களுக்குக் குடிநீர் பிரச்சனையே இருக்காது என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

பின்னர் பேசிய மேயர் பிரியா, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளில் புதியதாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதால், ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 1500ரூ வரை செலவு மிச்சமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments