பிரேசிலின் சாண்டா கேடரினா மாகாணத்தில் பேருந்தில் பயிற்சி பள்ளிக்கு சென்று வரும் நாய்கள்

பிரேசிலின் சாண்டா கேடரினா மாகாணத்தில், நாய்கள், தங்களுக்கு என தனியாக இயக்கப்படும் பேருந்தில் பயிற்சி பள்ளிக்கு சென்று வருகின்றன.
புளோரியானோபோலிஸ் நகரில் 'எஜுகேடர் டி கேஸ்' என்ற பெயரில் நாய்களுக்கான பயிற்சி மையம் மற்றும் டே கேர் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் உரிமையாளரான ஆண்ட்ரே ப்ரெசன் என்பவர், தனது பயிற்சி மையத்திற்கு வரும் நாய்களை, அவற்றின் வீடுகளிலிருந்து அழைத்து வந்து, மீண்டும் கொண்டுசென்று விடுவதற்காக பிரத்யேக பேருந்தை இயக்கி வருகிறார்.
நாய்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவற்றின் லீஷை இருக்கையில் கட்டுவதற்கு வசதியாக பேருந்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாய்களை பேருந்தில் அனுப்பிவைக்கும் அவற்றின் உரிமையாளர்கள், தங்களது செல்லப்பிராணிக்கு தேவையான உணவுகளை லஞ்ச் பேகில் கொடுத்துவிடுகின்றனர். இந்த பேருந்து பயணத்தை நாய்கள் மிகவும் ரசிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments