ஃபுல் போதை இளைஞர் vs அரை போதை ஆசாமி..! நடு ரோட்டில் நடந்த கச்சேரி..!!

0 2168

குடிகார மாநிலம் ஆவதை தடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி இருந்த நிலையில், ஃபுல் போதையில் புல் தரையில் மல்லாந்து கிடந்த போதை இளைஞரை, அரை போதை ஆசாமி ஒருவர் பாட்டுப் பாடியே ஓடச் செய்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரின் மையப் பகுதியில் அரங்கேறியது.

குடிபோதையில் இந்த இளைஞர் குடை சாய்ந்து கிடக்கும் இடம், வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகே சாலையின் நட்ட நடுவே உள்ள புல்வெளி.

இரவு நேரத்தில் சாலையில் போவோர் வருவோரெல்லாம் பார்த்த படி சென்று கொண்டிருந்த நிலையில், இவருக்கு அருகே வந்தார், முதியவர் ஒருவர்.

அரை போதையில் இருந்ததாக கூறப்படும் இந்த முதியவர், முழு போதை இளைஞரை பார்த்து கிண்டல் செய்து பாட்டு பாடத் தொடங்கினார்.

மூவ்மெண்ட்டுடன் இவர் பாடிய முதல் பாடலுக்கு போதை இளைஞர் அசராததால், அடுத்த பாட்டை ஆரம்பித்தார்.

முதியவரின் அட்ராசிட்டால் அரண்டு போன இளைஞர், இங்கிருந்து புறப்பட்டுச் செல்லலாம் என்று எத்தனிக்க, சென்று பா மகனே.. என்று பாட்டைத் தொடர்ந்தார் முதியவர்.

இத்தோடு விட்டால் போதும் என்று இங்கிருந்து நடையை கட்டினார், போதை இளைஞர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments