கடலூரில் பணத்துக்காக கொலை செய்து முதியவர் உடல் தண்டவாளத்தில் வீச்சு 2பேர் கைது

0 1944

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முதியவரை பணத்துக்காக கொலை செய்து தண்டவாளத்தில் வீசி ரயிலில் அடிபட்டு விபத்தில் இறந்தது போல் சித்தரித்து நாடகமாடிய 2பேர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

சென்னை- திருச்சி ரயில்வே தண்டவாளத்தில் கீரிமேடு என்னும் இடத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு சித்தானங்கூரை சேர்ந்த வின்சென்ட் லூயிஸ் என்ற முதியவர் ரெயிலில் அடிபட்ட காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

மாயமான அவரது செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து கண்காணித்த போலீசார் பெங்களூரை சேர்ந்த பெண்ணிடம் இருந்து செல்போனை கைப்பற்றினர்.

அந்த பெண்ணிடம் செல்போனை கொடுத்த சித்தானங்கூரைச் சேர்ந்த அமர் நாத், சிவா ஆகிய இருவரும் பணத்துக்காக வின்செண்ட் லூயிஸை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments