பெரம்பலூரில் அரசு அதிகாரிகளைத் தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - இபிஎஸ்

0 996

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளைத் தாக்கிய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புராணக் கதைகளில் சொல்லப்படும் அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்களைப் போல் திமுகவினர் அவதாரம் எடுத்து தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

திமுக நிர்வாகிகள் என்ற பெயரில், 300 குண்டர்கள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்று மிரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு காவல் துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ விரைந்து வராதது அவர்களின் கைகள் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டிருப்பதை காட்டுவதாகவும், ஆளுங்கட்சியினர் நடத்திய வெறியாட்டத்தின் வீடியோவை வெளியிட முதல்வர் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகார மமதையில் வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை திமுகவினர் மிரட்டுவது தொடர்கதையாக உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments