இதை சாப்பிட்டா கொடைக்கானலே தலைகீழா தெரியுமாம்..! பார்சல் சர்வீஸும் இருக்காம்பா..!

0 10308

கொடைக்கானலுக்கு டிரெக்கிங் ஆசையில்  கூட்டாளிகளுடன் சுற்றுலா செல்லும் வெளிமாநில இளைஞர்களை குறிவைத்து ஆசைவார்த்தைகள் கூறி மேஜிக் மஸ்ரூம் விற்றுவந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சாவை மிஞ்சும் போதைக்காளன் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

போதை ஏற்றிக் கொண்டு மலைப்பகுதியில் ஜீப்பின் பேனட்டிலும் , டாப்பிலும் தொற்றிய படி விபரீதமாக டிரெக்கிங் செல்வதற்கு என்றே சிலர் கூட்டாளிகளுடன் கொடைக்கானலுக்கு வருகின்றனர்

கொடைக்கானலின் நகரப்பகுதியை விட்டு ஊருக்கு ஒதுக்கு புறமாக சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடில்களை தேடிச்சென்று தங்கும் இந்த இளைஞர்களின் சொர்க்கபுரி வட்டக்கனல்..! என்று கூறப்படுகின்றது. காரணம் அங்கு தான் போதை ஏற்றும் மேஜிக் மஸ்ரூம் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது.

இங்கு விளைகின்ற ஒருவகை காளானை எடுத்து காயவைத்து சாப்பிட்டால் அந்த போதை முழுமையாக மூளையை விட்டு விலக 2 நாட்கள் ஆகும் என்கின்றனர். இதனை விற்கும் ஆசாமிகள் , இதை சாப்பிட்டால் கொடைக்கானலே தலைகீழாக தெரியும், முயற்சித்து பாருங்கள் என்று ஆசைவார்த்தைக்கூறி இளைஞர்களிடம் இந்த போதைக் காளானை கொண்டு சேர்ப்பதாக கூறப்படுகின்றது. கேரள மற்றும் கர்நாடக இளைஞர்கள், கருவாட்டை தேடி அலையும் திருட்டுப்பூனை போல வட்டக்கனல் மலைப்பகுதிகளில் போதைக்காளானை தேடி அலைவதாகவும், கோக்கர்ஸ் வாக், ஏழு ரோடு சந்திப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த போதை காளனை சிலர் சுற்றுலாபயணிகளை அணுகி நேரடியகவே விற்று வருவதாகவும் புகார்கள் எழுந்தது.

இதனை தொடர்ந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் நீண்ட கலமாக அங்கு சுற்றுலா வழிகாட்டி போல போதை காளான் விற்று வந்த சாலமன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரது வீட்டில் இருந்து 300 கிராம் எடையுள்ள போதைக்காளனை கைப்பற்றினர். அவரது மனைவி ஜெயந்தி மகள் விக்டோரியா ஆகியோர் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ஆர்டர் பெற்று, ஆன் லைன் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போதை காளனை பேக்கிங் செய்து, கொரியர் மூலம் அனுப்பி வைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது

 SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments