கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் வெடிக்க வைக்க டொமினிக் ஏன் டிபன் பாக்ஸ்வெடிகுண்டை தேர்ந்தெடுத்தான் என்ற காரணம் போலீஸ் விசாரணை

0 1121

கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் வெடிக்க வைக்க டொமினிக் ஏன் டிபன் பாக்ஸ்வெடிகுண்டை தேர்ந்தெடுத்தான் என்ற காரணம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக டிபன் பாக்சுடன் ஜெபக்கூட்டத்துக்குள் நுழைந்த டொமினிக் மார்ட்டின் மீது அங்கிருந்த யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

காரணம், ஜெபக்கூட்டத்துக்கு வருவோர் வழக்கமாக தங்களுக்கான உணவை வீட்டிலிருந்தே டிஃப்ன் பாக்ஸில் கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

நீண்டகாலமாக திருச்சபையோடு பயணித்த டொமினிக் மார்ட்டினுக்கு இது தெரியும் என்பதால், டிபன் பாக்ஸ் வெடிகுண்டை அவன் தயார் செய்து எடுத்துவந்துள்ளான்.

டொமினிக் மார்ட்டின் நினைத்ததுபோலவே, சபையில் இருந்தவர்களும் அவன் கொண்டுவந்துள்ளது உணவு அடங்கிய டிபன் பாக்ஸ்தான் என எண்ணியதாக தெரிகிறது.

அதனை சாதகமாக்கிக் கொண்ட டொமினிக் மார்ட்டின், பதற்றமில்லாமல் வெடிகுண்டு அடங்கிய டிபன் பாக்ஸை நாற்காலி ஒன்றின் அடியில் வைத்துச் சென்றுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments